விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இதே வெற்றி ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா, ஆகியோர் நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். அவர் நயன்தாராவுக்கு ஜோடியா? அல்லது வேறு கேரக்டரில் நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை-வசனம் எழுதுகிறார். கேமியோ பிலிம்ஸ் இண்டியா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திர்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

Post A Comment: