சுசிகணேசன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜீவன், அப்பாஸ், மாளவிகா நடிப்பில் 'திருட்டுப்பயலே' திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் பாபிசிம்ஹா மற்றும் பிரசன்னா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க தற்போது அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் நாயகி கேரக்டர், ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டருக்கு இணையானது என்பதால் நல்ல அனுபவமுள்ள நடிகையை தேடி வந்ததாகவும் இறுதியில் அமலாபால் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்ததால் ஒப்பந்தம் செய்ததாகவும் இயக்குனர் சுசிகணேசன் தெரிவித்துள்ளார்.
ஒரு படத்திற்கு சரியான நட்சத்திரங்களை தேர்வு செய்துவிட்டாலே பாதி பணி முடிந்ததாகவும், அந்த வகையில் அமலாபால் உள்பட அனைவருமே இந்த படத்திற்கு பொருத்தமானவர்களாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 2 முதல் தொடங்கவுள்ளது.

Post A Comment: