Propellerads
Navigation

அப்பல்லோ சென்ற ரஜினிகாந்த்

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று தமிழக மக்களும், அமைச்சர்களும் பல்வேறு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க டெல்லி தலைவர்கள் உள்பட பல்வேறு தலைவர்கள் தினந்தோறும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மாலை தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அப்பல்லோ வந்து மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

சுமார் 25 நிமிடங்கள் வரை மருத்துவமனையில் இருந்த ரஜினிகாந்த் பின்னர் மகளுடன் திரும்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Share
Banner

Post A Comment: