பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய முதல்படமான 'வெண்ணிலா கபடிக்குழு' கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. விஷ்ணு, சரண்யாமோகன், சூரி உள்பட பலர் நடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. 'வெண்ணிலா கபடிக்குழு 2' படத்தை சுசீந்திரனின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகனாக விஜய்யின் சகோதரர் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கும் என்றும் இந்த படத்தில் சூரி உள்பட முதல் பாகத்தில் நடித்த பலர் நடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: