Propellerads
Navigation

அஜீத்தின் ஈகோ குணம் பற்றி கொமடி நடிகர் கருத்து

அஜித் ஒரு நல்ல நடிகர் என்பதை விட அவர் ஒரு மனிதத்தன்மை உடையவர், ஈகோ இல்லாதவர், எளிமையானவர் என்ற வகையிலே அவரை பலருக்கு பிடிக்கும். இந்நிலையில் அவரது ஈகோ இல்லாத குணத்தை தான் நேரில் பார்த்ததாக பிரபல குணசித்திர மற்றும் காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குனர் விஜய் இயக்கிய 'கிரீடம்' படத்தில் நடித்த போது என்னை உட்கார வைத்து, அவர் நின்று கொண்டே பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். நீங்கள் நிற்கும்போது நான் எப்படி உட்காருவது என்று நான் கேட்டபோது 'எனக்கு பேக் பெயின்' அதனால் என்னால் உட்கார முடியாது. ஆனால் நீங்கள் உட்காருங்கள் நான் நின்று கொண்டே பேசுகிறேன்' என்று அவர் ஈகோ இல்லாமல் நடந்து கொண்ட விதம் என்னை உணர்ச்சிமயமாக்கிவிட்டது' என்று கூறியுள்ளார்,

அஜித்துடன் எம்.எஸ்.பாஸ்கர், 'அட்டகாசம்', 'வரலாறு', 'திருப்பதி', மற்றும் 'கிரீடம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Share
Banner

Post A Comment: