சினிமா வட்டாரத்தில், அடிக்கடி பேசப்பட்ட விஷால் - வரலட்சுமி காதல் விவகாரம், நேற்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.'ஏழு வருடங்களாக இருந்த எங்களுடைய காதல் உறவை, ஒருவர் உடைத்து விட்டார். அந்த செய்தியை, தன்னுடைய மேலாளர் மூலமாக சொல்லி அனுப்பியுள்ளார். உலகம் எங்கே போகிறது காதல் எங்கே இருக்கிறது' என, டுவிட்டரில் வரலட்சுமி பதிவு செய்துள்ளார்.
இது, விஷாலுடன் உள்ள காதல் முறிந்து விட்டதை, வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. இதுவரை விஷாலும், வரலட்சுமியும் காதலை வெளிப்படையாக கூறவில்லை; ஆனால், இருவரின் நட்பு, நெருக்கமான புகைப்படங்கள், காதலை காட்டியது. காதலன் யார் என்பதை கூறாத வரலட்சுமி, காதல் முறிந்ததை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

Post A Comment: