Propellerads
Navigation

'24' படத்திற்கு கிடைத்த சர்வதேச பெருமை

சூர்யா, சமந்தா நடிப்பில் விக்ரம்குமார் இயக்கிய '24' திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் ஒரு மணிமகுடம் போல் இந்த படம் 3ஆவது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பெருமை சூர்யாவின் '24' படக்குழுவினர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கே கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது. '24' படக்குழுவினர்களுக்கு நமது வாழ்த்துக்கள்
Share
Banner

Post A Comment: