Propellerads
Navigation

நயன்தாரா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முருகதாஸ்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடித்து வரும் நிலையில் இன்னுமொரு முக்கிய கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

ஆனால் இதுகுறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் விளக்கமளித்துள்ள இயக்குனர் முருகதாஸ், 'மகேஷ்பாபு நடிப்பில் எனது இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ராகுல்ப்ரித்திசிங் மட்டுமே முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதையே கோடிட்டு காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: