Propellerads
Navigation

தீபாவளிக்கு வெளிவருகிறது 'மகிழ்ச்சி' மற்றும் 'நெருப்புடா'

தமிழ் வார்த்தைகளான மகிழ்ச்சி மற்றும் நெருப்பு ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உச்சரிக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. 

ஆனால் அப்போதெல்லாம் இந்த வார்த்தைகள் எவ்வித பரபரப்பையும் ஏற்படுத்தாத நிலையில் ரஜினி பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக இன்று உலகம் முழுவதும் இந்த இரண்டு வார்த்தைகள் பிரபலமாகியுள்ளது. தமிழே தெரியாதவர்கள் கூட 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டு வார்த்தைகளை பட்டாசு தொழிலதிபர்களும் விட்டு வைக்கவில்லை. வரும் தீபாவளிக்காக பட்டாசு மற்றும் மத்தாப்புகளை விறுவிறுப்பாக தயாரித்து வரும் அவர்கள் பட்டாசுகளுக்கு 'நெருப்புடா' என்றும் மத்தாப்புகளுக்கு 'மகிழ்ச்சி' என்றும் பெயர் வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக இந்த இரண்டு வகை பட்டாசுகளின் விற்பனை அதிகரிக்கும் என பட்டாசு தொழிலதிபர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சாக்லேட் முதல் விமானம் வரை புரமோஷன் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள 'கபாலி', அடுத்து, வரும் தீபாவளிக்கு 'நெருப்புடா' மற்றும் மகிழ்ச்சி' பெயர்களில் பட்டாசு வடிவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: