சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக 5000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி பல புதிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இரண்டாவது வார இறுதி நாட்களில் இந்த படத்தின் வசூல் இதுவரை செய்யப்படாத சாதனையை செய்துள்ளது. 22 திரையரங்க வளாகங்களில் 642 காட்சிகள் ஓடிய 'கபாலி', ரூ.2,19,22,898 வசூல் செய்துள்ளது. சென்னையில் இதுவரை எந்த படமும் இரண்டாவது வார இறுதியில் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததில்லை என்பதும் இதுவே முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையில் இந்த படம் ரூ.9,14,86,010 வசூல் செய்துள்ளது.
Post A Comment: