Propellerads
Navigation

ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த படத்தில் 9 பாடல்கள்

'மின்சார கனவு', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், தற்போது இயக்கவுள்ள புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள செய்தியையும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்திற்காக ரஹ்மான் ஒன்பது பாடல்களை கம்போஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் நான்கு பாடல்களை அவர் ஏற்கனவே முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'புரூஸ்லீ' மற்றும் 'கடவுள் இருக்குறான் குமாரு' படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளதால் இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் ராஜீவ்மேனன் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: