Propellerads
Navigation

விக்ரமின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தின் இசை வெளியீடு  சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரி, விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹரியின் இயக்கத்தில் ஏற்கனவே விக்ரம், 'சாமி' மற்றும் 'அருள்' ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் விரைவில் 'சாமி 2' படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தை 'இருமுகன்' படத்தின் தயாரிப்பாளர் ஷிபுதமீன் தயாரிப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த போலீஸ் படமான 'சாமி', மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை நம் கண்முன் நிறுத்திய விக்ரம், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் நடிக்கவுள்ளது உண்மையில் அனைவருக்குமே ஒரு சந்தோஷமான விஷயம்தான்.
Share
Banner

Post A Comment: