Propellerads
Navigation

கபாலி தமிழகம் வசூல்... லேட்டஸ்ட் தகவல்...


கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் ரஜினி நடித்த 'கபாலி' மாபெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. கபாலி படத்திற்கு ஊடகங்களின் விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் இருவேறாக இருந்தன. சிலர் படம் சூப்பர் என்றும், சிலர் படம் மிகவும் சுமார் என்றும் கருத்து தெரிவித்தனர். இன்னும் சிலரோ லிங்காவைவிட மோசம் என்றும் கூறி வந்தனர்.

கபாலி படம் பற்றிய ரசிகர்களின் கருத்து எப்படி இருந்தால் என்ன? 'தமிழ்சினிமாவைப் பொருத்தவரை வசூலில் எப்போதும் நான்தான் கிங்' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். உலகளவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் கபாலி படம் சுமார் 8000 திரையரங்குகளில்தான் வெளியானது. உலகளவில் 'கபாலி'யின் முதல் நாள் வசூல் 100 கோடியைத் தாண்டியிருப்பதாக செய்திகள் வந்தன. அதை தயாரிப்பாளர் தாணுவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது கபாலி படத்தின் முதல் 3 நாட்களுக்கான தமிழக வசூல் நிலவரமும் தெரிய வந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 20.5 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருக்கிறது கபாலி. இதில் சென்னை சிட்டியில் மட்டுமே கிட்டத்தட்ட 5 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம் 'கபாலி'. இரண்டாவது நாளான சனிக்கிழமை 15.8 கோடி ரூபாய் வசூலையும், ஞாயிற்றுக்கிழமை 13.3 கோடி ரூபாய் வசூலையும் குவித்துள்ளதாக தகவல். இதுவரை எந்த தென்னிந்திய சினிமாவும் முதல் 3 நாட்களிலேயே சொந்த மாநிலத்தில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது கிடையாது.
Share
Banner

Post A Comment: