Propellerads
Navigation

சூப்பர்மேன் கதாநாயகி காலமானார்

சூப்பர்மேன் தொடர்கதையின் முதல் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்த நோயல் நீல் உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 95.

வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நோய் வாய்ப்பட்டிருந்த நீல், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டஸ்கானில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1920ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி அமெரிக்காவில் நீல் பிறந்தார். பாடசாலை படிப்பை முடித்ததும் கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்த நீல், அங்குள்ள ஒரு உணவகத்தில் பாடகராக பணிக்கு சேர்ந்தார். அதன் மூலம் ஹொலிவூட்டின் பாராமவுண்ட் ஸ்டூடியோவின் பரிச்சயம் அவருக்கு கிடைத்தது.

பின், 1940களில் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வந்த நீல்லின் திறமையை கண்டு கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் 1948ஆம் ஆண்டு சூப்பர்மேன் திரைப்படத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்தது. 

சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் கிரிக் அலினும், அவரது தோழியாக வரும் லேன் கதாபாத்திரத்தில் நோயல் நீலும் நடித்தனர்.

பின்னர் 1950ஆம் ஆண்டு ஜோர்ஜ் ரீவிஸ் நடிப்பில் உருவான சூப்பர்மேன் தொலைக்காட்சி தொடரிலும் நீல் நடித்தார். 

1978ல் திரைப்படமாக உருவான சூப்பர்மேனில் நடித்தார். லூயிஸ் லேன்கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தமைக்காக மெட்ரோ பொலிஸில் நீலுக்கு 2010 ஆம் ஆண்டு சிலை நிறுவப்பட்டதுடன் தங்க காலணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: