நயன்தாரா 2005-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த படங்கள் வசூல் குவித்தன. ‘மாயா’ படத்தில் பேய் வேடத்திலும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காது கேளாத பெண்ணாகவும் வந்தார். தனி ஒருவன், இது நம்ம ஆளு படங்களும் நன்றாக ஓடின.
இதனால் அவரது சம்பளம் ரூ.3 கோடியை எட்டியது. விக்ரமுடன் நடிக்கும் இருமுகன், கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா, ஷீவாவுடன் நடிக்கும் திருநாள் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நடிகைகள் வாங்கும் அதிக பட்ச சம்பளம் ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


Post A Comment: