ஆயிரம் சர்ச்சையில் சிக்கினாலும் சல்மான்கானின் மவுசு இன்னமும் குறையாமல் இருப்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இத்தனைக்கும் இவரது நடிப்பில், இவர் தேர்வு செய்யும் கதைகளில் ஆமிர்கானைப்போல் புதிய முயற்சிகள் ஏதுமில்லை.
வழக்கமான கமர்ஷியல் படங்களில்தான் தொடர்ந்து நடிக்கிறார். ஆனாலும் அள்ளுகிறது வசூல். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் சல்மான் கான், அனுஷ்கா சர்மா, ரன்தீப்கூடா நடிப்பில் கடந்த புதன்கிழமை வெளியான சுல்தான் படமும் இதற்கு விதிவிலக்கில்லை.
சுல்தான் படத்திற்கு மிகப்பெரிய வசூல் கிடைத்திருப்பதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த சுல்தான் படம் இந்தியாவில் மட்டும் 4350 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
வெளிநாட்டில் 1100 திரையரங்களில் வெளியாகியிருக்கிறதாம். முதல் நாளில் சுல்தான் படம் இந்தியாவில் மட்டும் 36 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளில் 20 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். முதல் நாளைவிட இரண்டாம் நாள் வசூல் அதிகமாம். உலகளவில் சுல்தான் படத்திற்கு 2 நாட்களில் 110 கோடிக்கும் மேல் வசூல் செய்த்திருக்கிறது.
Post A Comment: