சூரி போன்ற கொமடியன்களுடன் சேர்ந்து கொண்டு கதாநாயகிகளை கலாய்த்துவந்த சிவகார்த்திகேயன் அந்த பாணியை மாற்ற வேண்டு என்று தற்போது எடுத்துள்ள முயற்சிதான் ரெமோ திரைப்படம்
இந்த திரைப்படத்தில் நடித்துள்ள பெண் வேடத்துக்காக தினமும் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடித்துள்ளார்.
அதுபற்றி அவர் கூறுகையில், 'இந்த ரெமோ திரைப்படத்தில் நான் எந்த கருத்தும் சொல்லவரவில்லை. இதுவும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்தான். ஆனால், இதற்கு கொஞ்சம் அதிகமாக உழைத்திருக்கிறேன்.
பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற சொன்னபோதே பயந்து விட்டேன். பிசி.ஸ்ரீராம் உள்ளிட்டவர்கள் சொன்ன தைரியத்தில்தான் நடித்தேன்.
மொத்தம் 45 நாட்கள் பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். எனது கெட்டப்பைப்பார்த்து வெளியூர்களில் உள்ளவர்கள் யாரோ நடிகை என்றுதான் நினைத்தார்கள். சிலர் அனுஷ்கா தங்கையா? என்று கூட கேட்டார்கள்.
அதைதான் இந்த நேர்ஸ் கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். மேலும், எனது மகளுக்கு கூட ரெமோ ஆன்ட்டி என்று சொன்னால்தான் என்னை தெரியும். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் அவளை பாதித்திருக்கிறது. அதனால் இந்த கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கிறேன்' என்கிறார் ரெமோ.
Post A Comment: