கிக் திரைப்படத்தின் மூலம் பொலிவூட்டில் பிரபலமானவர் நடிகை ஜெக்குலின் பெர்ணான்டஸ்.
தற்போது டிஷ்யூம் திரைப்படத்தில் நடித்து முடித்திருப்பவர், அடுத்தப்படியாக சில திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான டான் திரைப்படங்களின் வரிசையில் விரைவில் டான்-3 உருவாக இருக்கிறது.
இதில் முதல் இரண்டு பாகங்களில் நடித்த ப்ரியங்கா சோப்ரா, மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை. அதனால், அந்த ரோலில் ஜெக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க இருப்பதாக செய்தி வந்தது. ஆனால் இதனை ஜெக்குலின் மறுத்துள்ளார்.
இது குறித்து ஜொக்குலின் பெர்ணான்டஸ் கூறியிருப்பதாவது, 'இப்போது தான் மும்பைக்கு வந்தேன். வந்ததுடன் நான் டான்-3யில் நடிப்பதாக செய்தி கேள்விப்பட்டேன். எங்கிருந்து இது போன்று செய்தி கிளம்புகிறது என்று தெரியவில்லை. டான் திரைப்படம் தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை, இந்த செய்தி முற்றிலும் தவறானது' என்று கூறியுள்ளார்.
Post A Comment: