'திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து ஜி.வியின் இன்னொரு புதிய திரைப்படத்திலும் கயல் ஆனந்தியே ஒப்பந்தமாகியிருந்தார்.
இதனால் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்திக்கு சிபாரிசு செய்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷிடம் கேட்டபோது, 'ஆனந்தி என் திரைப்படங்களில் நடிப்பதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பதால் இயக்குநர்கள்தான் அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர்' என்று கூறினார்.
இந்த நிலையில், ஆனந்தியுடன் நடிப்பது தொடர்ந்தால் இன்னும் பெரிய அளவில் கிசுகிசுக்கள் பரவி விடும் என்று உசாரான ஜி.வி.பிரகாஷ், தனது புதிய திரைப்படத்தில் ஆனந்திக்கு பதிலாக நிக்கி கல்ராணியை ஒப்பந்தம் செய்யச்சொல்லி விட்டாராம்.
டார்லிங் திரைப்படத்தில் நடித்த இராசியான நடிகை என்பதோடு, தன்னை அவரோடு இணைத்து எந்தவொரு கிசுகிசுவும் வெளியாகவில்லை என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.
Post A Comment: