Propellerads
Navigation

லட்சுமியின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்

வேதாளம் திரைப்படத்துக்குப் பிறகு  லட்சுமி மேனன் பற்றிய செய்திகள் குறைவாகவே வர ஆரம்பித்தன. மிருதன் திரைப்படமும் சுமாரான வெற்றியை பெற, பிறகு வேறு எந்த திரைப்படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமலே இருந்தார். 

எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட 'சிப்பாய்' திரைப்படம் ஏறக்குறைய நின்று போய்விட்டது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் ஜோடியாக 'றெக்க' திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆன பிறகு மீண்டும் லட்சுமி மேனன் பற்றிய செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. 

மதுரையில் ஆரம்பமான முதற்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து முடிந்துவிட்டதாம். தான் இயக்கிய முதல் திரைப்படமான வா டீல் வருமா, வராதா என்று தெரியாத நிலையில் இயக்குநர் ரத்தினசிவா றெக்க திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

'றெக்க' திரைப்படத்தில் தனக்குக் கிடைத்துள்ள கதாபாத்திரத்தில் மிகவும் விருப்பமுடன் நடித்து வரும் லட்சுமி மேனன், கிராமப்புறத்து கதாபாத்திரங்களுக்கு 'குட்பை' சொல்லிவிட்டாராம்.

அத்துடன், தனது அடுத்த இன்னிங்ஸ், தான் நினைப்பது போலவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் லட்சுமி மேனன்.


Share
Banner

Post A Comment: