வல்லவன் திரைப்படத்தில் நடித்த போது, அவசர அவசரமாக காதலில் விழுந்த சிம்பு-நயன்தாரா ஜோடி, அதே வேத்தோடு அந்த திரைப்படம் வெளியான சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர்.
அதன்பின்னர், எந்த திரைப்படத்திலும் இருவரும் இணையவில்லை. இருப்பினும் பல ஆண்டுகளுக்குப்பிறகு இயக்குநர் பாண்டிராஜ், இது நம்ம ஆளு திரைப்படத்துக்காக இருவரையும் இணைத்து விட்டார்.
அண்மைகாலமாக தோல்விகளாக சந்தித்து வந்த சிம்பு, இது நம்ம ஆளு ஓட்டத்தால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அதே மகிழ்ச்சியுடன், அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், 'இது நம்ம ஆளு திரைப்படத்தின் க்ளைமாக்சைப்போன்று நிஜ வாழ்க்கையில் நயன்தாராவுடன் இணைய வாய்ப்புள்ளதா?' என்று சிம்புவை நோக்கி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, 'அதற்கு வாய்ப்பில்லை' என்று பதிலளித்துள்ளார் சிம்பு.
'இருப்பினும், சினிமாவில் தொடர்ந்து நயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு உள்ளது' என்றும் சிம்பு கூறியுள்ளார்.


Post A Comment: