ரஜினிகாந்த், அஜித் நடித்த 'பில்லா' திரைப்படத்தின் தொடர் பாகமான 'பில்லா 2018'இல் நடிக்கப் போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.
தன்னுடைய ரசிகர்களுடன் நேரடியாக வீடியோ மூலம் உரையாடியபோது சிம்பு, இதனைத் நேற்று தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, 'பில்லா 2018, திரைப்படத்தில் நீங்க, நான் யுவன், என்ன சொல்றீங்க, நான் தயார்' என இயக்குநர் வெங்கட்பிரபு டுவிட்டரில் கேள்வியொன்றை பதிவு செய்தார்.
அதற்கு சிம்புவும், 'பொறந்ததுல இருந்தே ரெடி, பில்லா 2018, கலக்குவோம்' என பதிலளித்திருக்கிறார்.
இரவு நேரம் என்றாலும் பில்லா 2018 ஐ டுவிட்டர் டிரென்டிங்கில் கொண்டு வந்து விட்டார்கள் சிம்புவின் ரசிகர்கள்.

Post A Comment: