Propellerads
Navigation

அஜித் ஜோடியாக ஹிந்தி நடிகை.?


'வீரம், வேதாளம்' படங்களுக்குப் பிறகு அஜித் - இயக்குனர்சிவா கூட்டணியில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள படம் மே மாதத்தில் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

படத்தின் கதாநாயகி யார் என்று இன்னமும் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த முறை இதற்கு முன் நடித்த நடிகைகள் யாரும் வேண்டாம், புதிதாக யாரையாவது அழைத்து வாருங்கள் என இயக்குனர் சிவாவிடம் அஜித் சொல்லிவிட்டாராம். அதனால், இதுவரை தமிழில் நடிக்காமல் வேறு மொழிகளில் நடித்த நடிகைகளை வலை வீசித் தேடி வருகிறார்களாம்.

அதில், சில பிரபலமான ஹிந்தி ஹீரோயின்களும் அடக்கம் என்கிறார்கள். ஆனால், அவர்கள் கேட்கும் சம்பளம் சில பல கோடிகளில் இருக்கும் என்பதால் கொஞ்சம் பிரபலமில்லாத நாயகிகளைத் தேட ஆரம்பித்துள்ளார்களாம். அவர்களில் தற்போதைய நிலவரப்பட கிரீத்தி சனான் என்ற நடிகை தேர்வுப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் என்கிறார்கள். டில்லியைச் சேர்ந்த கிரீத்தி தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக '1 நேநொக்கடைன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர். ஹிந்தியில் 'ஹீரோபான்ட்டி, தில்வாலே' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இருந்தாலும் அஜித்துடன் ஏற்கெனவே ஜோடி சேர்ந்த பல முன்னணி கதாநாயகிகளும் எப்படியாவது இந்தப் படத்தில் நடித்துவிட வலை வீசி வருகிறார்களாம். கடைசியில் அஜித் யாரை டிக் செய்கிறாரோ அவர்தான் கதாநாயகி என்பது ஊரறிந்த விஷயம். அஜித் சொல்வதை இயக்குனர் சிவா அப்படியே கேட்பதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் படத்தை இயக்குகிறார் எனச் சொல்கிறது கோலிவுட் வட்டாரம்.
Share
Banner

Post A Comment: