நீலப்பட நடிகை சன்னி லியோனும், பிரபல மாடல் அழகி பூஜா மிஸ்ராவும் ஒரு தனியார் டி.வி.நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பூஜா மிஸ்ராவை சன்னி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாடல் அழகி பூஜா மிஸ்ரா, சன்னி லியோன் மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சன்னி லியோன் என்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை கூறினார். என்னை இருட்டடிப்புசெய்து தன்னை முன்னிலைபடுத்திக் கொண்டார். அதனால் நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். தொடர்ந்து மீடியாக்களிடம் என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். என்னை தவறான பெண்ணாக சமுதாயத்தில் சித்தரிக்கிறார். இதனால் நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். எனவே சன்னி லியோன் எனக்கு 100 கோடி ரூபாய் நஷ்டஈடு தர உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பூஜா மிஸ்ரா கூறியுள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான பூஜா மிஸ்ரா ஆஜராகாதததால் வழக்கு வருகிற ஜுன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.


Post A Comment: