Propellerads
Navigation

நயன்தாராவுக்கு மூன்று கோடி சம்பளம் கொடுத்த சிவகார்த்திகேயன்

'24AM Studios' என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி, தன்னுடைய நண்பர் ஆர்.டி.ராஜா பெயரில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் - ரெமோ. சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது 75 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது. இந்த படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதுவும் நண்பர் பெயரில் சிவகார்த்திகேயனே தயாரிக்கும் அவரது சொந்த தயாரிப்புதான். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அடுத்த கட்டமாக, இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இரண்டாம் நிலை கதாநாயகிகளை தனக்கு ஜோடியாக்கிய சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகி தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

ஹன்சிகா உடன் ஏற்கனவே மான் கராத்தே படத்தில் ஜோடி சேர்ந்துவிட்டதால், மோகன்ராஜா இயக்கும் படத்திற்கு நயன்தாராவை கதாநாயகியாக கமிட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். நயன்தாராவை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க பெரும் விலை கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதாவது நயன்தாராவுக்கு மூன்று கோடி சம்பளம் கொடுத்து அவரை புக் பண்ணி இருக்கின்றனர். 'தனி ஒருவன்' படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் நடிக்கும் படம் இது. சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்து நடிப்பதால் படத்துக்கு பெரிய அளவில் பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற எதிர்பார்க்கிறார்கள்.
Share
Banner

Post A Comment: