Propellerads
Navigation

ஏப்ரல் 8ம் தேதி 8 படம் ரிலீஸ்

ஏப்ரல் 8ம் தேதி, வெள்ளிக் கிழமை, “அவன் அவள், ஆதி கோட்டை, முதல் தகவல் அறிக்கை, கிடா பூசாரி மகுடி, ஓய், ஜெனிஃபர் கருப்பையா, ஜித்தன் 2, ஒரு நொடியில் பார்வதிபுரம்” ஆகிய 8 படங்கள் வெளியாக உள்ளன. ஒரே நாளில் இவ்வளவு படங்கள் வெளிவருவது இந்த ஆண்டில் இதுவே முதல் முறை. இதில் எந்தப் படமும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில படங்கள் மிகக் குறைந்த அளவில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மட்டும் கூட வெளிவருகின்றன.

தமிழ்த் திரையுலகில் வாரத்துக்கு வாரம் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் மூன்று மாதங்களிலேயே 50 படங்கள் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏப்ரல் 14ம் தேதி 'தெறி' படம் வெளிவருவதால், அப்போது தியேட்டர்கள் கிடைக்காது என்ற காரணத்தினாலேயே ஒரு வாரம் முன்னதாகவே இத்தனை படங்களை வெளியிடுகிறார்கள்.

இதில் பல படங்களுக்கு சென்னையில் முக்கிய தியேட்டர்கள் கிடைக்கவேயில்லை. ஆனால், தெலுங்குப் படமான 'சர்தார் கப்பார் சிங்' படத்திற்கு அனைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளும் கிடைத்துள்ளன. 8ம் தேதி வெளிவரும் 8 படங்களில் எந்தப் படம் வெற்றிகரமாக ஓடும் என்பதைச் சொல்லவே முடியாது என்கிறார் அனுபவ வினியோகஸ்தர் ஒருவர். அதிகப் படங்கள் வருவது நல்லதுதான் இருந்தாலும் கொஞ்சம் அக்கறையுடன் அந்தப் படங்களை எடுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்கிறார் அவர்.
Share
Banner

Post A Comment: