'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே தினத்திலேயே தெலுங்கிலும் வெளியாகும் எனத் தெரிகிறது.
கேரளாவில் மட்டும் 'தெறி' படம் சுமார் 200 திரையரங்குகள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'தெறி' படத்தை அமெரிக்காவில் சினி கேலக்சி என்ற வினியோக நிறுவனம் வெளியிடுகிறது. அந்நிறுவனம் அமெரிக்காவில் 'தெறி' வெளியாகும் 139 தியேட்டர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இது முதல் பட்டியல்தான் என்றும் வெளியீட்டிற்கு முன்னதாக மேலும் பல தியேட்டர்கள் சேரும் என்றும் தெரிகிறது. 8ம் தேதி முதல் முன்பதிவும் 14ம் தேதி சிறப்பு பிரிமீயர் காட்சியும் நடைபெற உள்ளது.


Post A Comment: