Propellerads
Navigation

ஏடாகூடமான கேள்வி: 'பளார்' விட்ட சன்னி


பாலிவுட்டின் கவர்ச்சி குயினாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். ஆரம்பகாலத்தில் ஆபாச நடிகையாக நடித்த சன்னி லியோன், பின்னர் அதிலிருந்து விடுபட்டு இப்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஹோலி பண்டிகை நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குஜராத்தின் சூரத் நகரில் நடந்த ஹோலி பண்டிகையில் சன்னி லியோன் கலந்து கொண்டார்.

குஜராத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் நிருபர் ஒருவர், சன்னிலியோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பேட்டி காண சென்றார். அப்போது ஒருநாள் இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு வாங்குகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த சன்னிலியோன், நிருபர் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.

இதுகுறித்து சன்னி லியோனின் கணவர் கூறியுள்ளதாவது... ''அந்த நிருபருக்கு சன்னி லியோன் நல்ல பதில் கொடுத்துள்ளார். இதற்காக நாங்கள் போலீசுக்கு செல்லவில்லை. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கல்லூரி மாணவர்கள். அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அப்படியே விட்டுவிட்டோம்'' என்றார்.
Share
Banner

Post A Comment: