Propellerads
Navigation

'தோழா' வெற்றி, சோகத்தில் ஸ்ருதிஹாசன்

'தோழா' படம் நிச்சய வெற்றி என தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் உள்ளவர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். படம் சம்பந்தப்பட்ட அனைவரும், படத்தை வாங்கியவர்களும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒருவர் மட்டும் சோகத்தில் இருக்கிறார், அவர்தான் ஸ்ருதிஹாசன். இப்போது தமன்னா நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் ஸ்ருதிஹாசன். சில நாட்கள் மட்டும் படப்பிடிப்புக்குச் சென்ற ஸ்ருதிஹாசன், திடீரென படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

அதன் பின் தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த விஷயம் பஞ்சாயத்துக்குச் சென்றது. இரு தரப்பிற்கும் சுமூகமான முடிவைக் கொடுத்து பிரச்சனையை தீர்த்து வைத்தார்கள். தற்போது படம் தமிழ், தெலுங்கில் மிகப் பெரும் வெற்றி என்ற செய்திகள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து, ஸ்ருதிஹாசன் சோகத்தில் ஆழ்ந்துவிட்டாராம். ஆரம்பத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்காது என்று நினைத்துதான் ஸ்ருதிஹாசன் படத்திலிருந்து விலகியதாகச் சொன்னார்கள். ஆனால், தமன்னாவின் கதாபாத்திரமும், அவருடைய ஆடைகளும் ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்துவிட்டன. தனக்குக் கிடைக்க வேண்டிய புகழ் தன்னுடைய அவசரத்தால் போய்விட்டதே என தற்போது ஸ்ருதி வருந்துகிறாராம். இரண்டு மொழிகளிலும் வெற்றி என்றால் சோகம் வராமல் என்ன செய்யும் ?.
Share
Banner

Post A Comment: