Propellerads
Navigation

சிறு காயத்துக்கே சீன் போட்ட ஜெயம் ரவி


ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும், ரசிகர்கள் அல்லாத சாதாரண மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அறியாத பலர் நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது வருத்தமே. அதிலும் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு தங்களுடைய ரசிகர்களுடன் மிகவும் நெருங்கிவிட்டதாக சில நடிகர்கள் நினைக்கிறார்கள். அதனால், தாங்கள் எதைப் பற்றி பதிவு செய்தாலும் அதைக் கொண்டாடுவார்கள் என்ற ஒரு தப்புக் கணக்கைப் போட்டுவிட்டார்கள்.

நடிகர் ஜெயம் ரவி படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அவருடைய வலது கன்னத்தில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனே, ரசிகர்களிடம் அனுதாபத்தைத் தேடிக் கொள்வதற்காக அந்த புகைப்படத்துடன், “திரைப்படம் தயாரிப்பது எளிதல்ல, இது மேக்கப் அல்ல' என்ற பதிவிட்டிருந்தார்.

அந்த காயத்தைப் பார்த்தால் அது ஒரு நாளிலேயே சரியாகி விடக் கூடிய காயமாகத்தான் தெரிகிறது. மிக மிக லேசான சிராய்ப்புக் காயம்தான் அது. அதற்கே ரசிகர்கள் அனுதாபப்பட்டு விடுவார்கள் என்று நினைத்துவிட்டார். ஆனால், நடந்தது வேறு.

ரசிகர்கள் பலரும் ஜெயம் ரவியின் காயத்தைப் பற்றி கண்டபடி கமெண்ட் போட்டு அவரை உண்டு, இல்லை என்றாக்கி விட்டார்கள். பத்து ரூபாய் சம்பாதிப்பதற்கே பலரும் இதை விட அதிகமான காயம் அடைகிறார்கள். ஆனால், பல கோடி சம்பளம் வாங்கும் நீங்கள், இதற்கே இப்படி வருத்தப்படுவதா என்ற ரீதியில் எக்கச்சக்கமான கமெண்ட்டுகளைப் போட்டுவிட்டார்கள்.

பாவம் ஜெயம் ரவி, நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. தொடர்ந்து சில வெற்றிகள் பெற்றுவிட்டால் தலைகால் புரியாது என்பது இதுதானோ.... !
Share
Banner

Post A Comment: