Propellerads
Navigation

'தெறி' படத்தின் 7 பாடல்களும்... அதன் விபரமும்...!


அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள தெறி படத்தின் பாடல்கள் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள 50வது படம் தெறி. இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். தெறி படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருக்கிறது. அதன்விபரம் இங்கே...

1. 'ஜித்து ஜில்லாடி....' பாடலாசிரியர்: ரோகேஷ், பாடியவர்கள்: இசையமைப்பாளர் தேவா, பாலச்சந்திரன்.

2. 'என் ஜீவன்...' பாடலாசிரியர்கள்: நா முத்துக்குமார், ஆர் தியாகராஜன் (சமஸ்கிருத வரிகள்), பாடியவர்கள்: ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி

3. 'ஈனா மீனா டீகா...' பாடலாசிரியர்கள்: பா விஜய், அருண்ராஜா காமராஜ் (ராப் வரிகள்), பாடியவர்கள்: உத்தாரா உன்னி கிருஷ்ணன், ஜிவி பிரகாஷ்குமார்

4. 'செல்லா குட்டி...' பாடலாசிரியர்: கபிலன், பாடியவர்கள்: விஜய், நீதி மோகன்.

5. 'தாய்மை...' பாடலாசிரியர்: புலவர் புலமைப்பித்தன், பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ.

6. 'ராங்கு...' பாடலாசிரியர்: கபிலன், பாடியவர்கள்: டி ராஜேந்தர், ஜிவி பிரகாஷ் குமார், சோனு காக்கர்

7. 'டப் தெறி ஸ்டெப்...' பாடலாசிரியர் : அருண்ராஜா காமராஜ், பாடியவர் : அருண்ராஜா காமராஜ்

தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படத்தின் தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டுள்ளார். இப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: