சின்னத்திரை தொடர் இயக்குனர் மங்கை அரிராஜன் இயக்கி உள்ள படம் 'இளமை ஊஞ்சல்'. நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். கார்த்திக் பூபதிராஜா இசை அமைத்துள்ளார், கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நீண்ட நாள் கிடப்பில் கிடந்த இந்தப் படம் தற்போது வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் கதை பற்றிய தகல்கள் தற்போது வெளியாகி உள்ளது. முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி ஆகியோர் ஒரு படப்பிடிப்புக்காக ஒக்கேனக்கல் செல்கிறார்கள்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அவர்களின் டச்சப் பாய்களே 5 பேரையும் கடத்தி விடுகிறார்கள். அவர்கள் எதற்காக கடத்துகிறார்கள் என்பது மட்டும் சஸ்பென்சாம். பின்பு அவர்களை நமீதா தலைமையிலான போலீஸ் படை மீட்டு வருவதுதான் கதை என்கிறார்கள். நமீதா உள்ளிட்ட அத்தனை ஹீரோயின்களும் ஒக்கேனக்கலில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்களாம்.

Post A Comment: