திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, 18 வருடங்களுக்குப்பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தார். அப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வெளியானது. இப்படத்தின் இந்திப்பதிப்பில் நட்புக்காக அமிதாப்பச்சனும், தமிழ்ப்பதிப்பில் அஜீத்தும் நடித்திருந்தனர். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றபோதும், பின்னர் பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த வேடத்தில் நடிக்க ராஜமவுலி அழைத்தபோது, 5 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தார் ஸ்ரீதேவி. அதனால் பின்னர் அந்த வேடத்தில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தார் ராஜமவுலி.
இந்த நிலையில், மீண்டும் விஜய் நடித்த புலி படத்தில் மகாராணி யவனராணி வேடத்தில் நடித்தார். அதன்பிறகு சில வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கு சென்றபோதும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களாக இல்லாததால் தவிர்த்து வந்த அவர், தற்போது இந்தியில் 'மா' என்றொரு படத்தில் நடிக்கிறாராம். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வாழும் ஒரு பெண்ணின் மனநிலையை சொல்லும கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறாராம் ஸ்ரீதேவி. அதோடு, க்ளைமாக்சில் அவர் அம்மாவாகும்போது அடையும் சந்தோசத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தும் கதையாம். அதனால் முந்தைய படங்களை விட இந்த படத்தில் தனது நடிப்பினால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறாராம் ஸ்ரீதேவி.
இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார். தற்போது படத்திற்கான பிரீ-புரெடாக்ஷன்ஸ் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது.

Post A Comment: