மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘அஞ்சலி’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷாமிலி. இதைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாமிலி, பின்னர் படிப்பில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின்னர் படிப்பு முடித்துவிட்டு தெலுங்கு சினிமா உலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தற்போது தமிழில் ‘வீரசிவாஜி’ படத்தின் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஷாமிலி, அஞ்சலி என்ற பெயரில் நடிக்கிறாராம். அஞ்சலி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, தற்போது கதாநாயகியாகவும் அஞ்சலி என்ற பெயருடன் தமிழுக்கு அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விக்ரம் பிரபு டாக்சி டிரைவராக நடிக்கிறார். பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் இடைப்பட்ட பயணத்தில் நடக்கும் கதைதான் ‘வீரசிவாஜி’ படத்தின் கதை. இதில் ஷாமிலி விஜய் ரசிகையாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். இப்படத்தை கணேஷ் விநாயக் என்பவர் இயக்கி வருகிறார்.

Post A Comment: