Propellerads
Navigation

10 மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடியே நடித்த ஹரிப்பிரியா

கன்னட படவுலகில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயராகவேந்திரா தமிழுக்கு அறிமுகமாகும் படம் 'அதர்வணம்'. இப்படத்தை 'சிலந்தி' படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கி வருகிறார். விஜயராகவேந்திராஇ கன்னட சூப்பர் ஸ்டார்களான சிவராஜ் குமார்இ புனித் ராஜ்குமார் ஆகியோரின் மைத்துனன் ஆவார். 

விஜயராகவேந்திரா அறிமுகமாகும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கிறார். இந்த படத்தில் மாறுபட்ட வேடத்திலும்இ கவர்ச்சியிலும்இ நடிப்பிலும் ஹரிப்பிரியா வெளுத்து வாங்கியுள்ளாராம். 

குறிப்பாகஇ இப்படத்தின் படப்பிடிப்பின்போது நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற காட்சியில் தண்ணீரில் மூழ்கி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் ஹரிப்பிரியா. 

அதாவதுஇ படத்தில் ஹரிப்பிரியா நீச்சல் குளத்தில் குளித்து விளையாடுவது போன்ற ஒரு காட்சியை சமீபத்தில் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் படமாக்கியுள்ளனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்புஇ தொடர்ந்து காலை 6 மணி வரை நடைபெற்றிருக்கிறது. 

இந்த படப்பிடிப்பில் சுமார் 10 மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடியே நடித்துள்ளார் ஹரிப்பிரியா. கடுங்குளிர்இ களைப்பு இரண்டும் ஒன்றுசேர திடீரென 12 அடி ஆழமுள்ள அந்த நீச்சல் குளத்திற்குள் மூழ்கத் தொடங்கியுள்ளார் ஹரிப்பிரியா. 

சுதாரித்துக் கொண்ட படக்குழுவினர் உடனடியாக நீச்சல் குளத்திற்குள் குதித்து ஹரிப்பிரியாவை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தால் பதறிப்போன ஹரிப்பிரியாவின் தாயார் படக்குழுவினரிடம் வாக்குவாதம் செய்யஇ கடைசியில் ஹரிப்பிரியாவே அவரது அம்மாவை சமாதானம் செய்துள்ளார். 

இந்த படத்துக்காக ஏற்கெனவே இரண்டு முறை ஹரிப்பிரியாவுக்கு ரத்தகாயம் ஏற்பட்டுள்ளதாம். அதுமட்டுமில்லாமல் நிறைய கஷ்டப்பட்டு வேறு நடித்துள்ளாராம். இதற்கெல்லாம் நிச்சயம் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீதி காட்சியிலும் நடித்துக் கொடுத்தாராம் ஹரிப்பிரியா.
Share
Banner

Post A Comment: