ஈட்டி திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள நடிகர் அதர்வா, கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
பாணா காத்தாடி, இரும்பு குதிரை, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி ஆகிய திரைப்படங்களில் கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும் அதர்வா இஷ்டப்பட்ட வெற்றி ஈட்டியில் தான் கிடைத்திருக்கிறது.
தனது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் தானே நடிக்க முடிவு செய்துள்ள அதர்வா, அதனையடுத்து திறமையான அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து சிறிய பட்ஜெட்டில் திரைப்படங்கள் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.
அத்துடன், தனது நிறுவனத்தின் மூலம் வருடத்துக்கு இரண்டு திரைப்படங்கள் தயாரிக்கவும் அதர்வா முடிவு செய்துள்ளாராம்.
தற்போது அதர்வா நடித்து வரும் கணிதன், ருக்குமணி வண்டி வருது திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்ததும் இந்தத் திரைப்படம் ஆரம்பமாகவுள்ளதுடன் பத்ரி வெங்கடேஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.
Post A Comment: