சமந்தா தமிழில் விஜய்யுடன் 'தெறி', சூர்யாவுடன் '24', தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'பிரமோற்சவம்' என்று தமிழ்–தெலுங்கில் 'பிசி'யாக நடித்து வருகிறார். அதே நேரத்தில் சமூக சேவையிலும் ஆர்வமுடன் இருக்கிறார்.
இதுபற்றி கூறிய சமந்தா....
நான் முழு நேரமும் சமூக சேவை செய்ய விரும்புகிறேன். ஏழை மக்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு உதவ எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது கடவுள் எனக்குத் தந்த கொடை. ஒருமுறை நான் முழுநேர சமூக சேவை செய்வதற்காக சினிமாவை விட்டு போய் விட நினைத்தேன். ஆனால் சினிமாவால்தான் பணமும், பிறருக்கு உதவ வாய்ப்பும், திறமையும் எனக்கு கிடைக்கிறது. நான் எனது திரைப்பட தொழிலை நேசிக்கிறேன். சினிமா மீது எனக்கு இருக்கும் அன்புக்கும் முடிவு இல்லை. இது எனது வாழ்க்கை.
இதன் மூலம் மகிழ்ச்சியும் நிறைவும் பெறுகிறேன். திரைப்பட தொழில் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் சமூக சேவை செய்வதும், மக்களுக்கு உதவுவதும் முக்கியம். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் செய்து வருகிறேன். திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் எனக்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது. எனவே சினிமாவில் இருந்தாலும் சேவை செய்து சமூக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.
Post A Comment: