Propellerads
Navigation

பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் திரைப்படங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி

சென்னை எழும்பூரை சேர்ந்தவர் பாலம்பாள் (வயது 60). இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஆபாச பாடல் தொடர்பாக சிம்பு மீது வழக்குப்பதிவு செய்ய வேகம் காட்டியதுபோல, டி.வி. சேனல்கள், திரைபடங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பாடல் வரிகள், பாடல் நடனக்காட்சிகள், வசனங்கள் உள்ளிட்டவைகள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடவேண்டும். இதுதொடர்பாக கடந்த 26-ந் தேதி நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், ‘மனுதாரர் அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பிவிட்டு, உடனடியாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

Share
Banner

Post A Comment: