நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் ஆபாசமாக இருப்பதாக கூறி பெண்கள் அமைப்பினர் சிம்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் சிம்புவுக்கு எதிராக கோவை, சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
சைதாப்பேட்டை கோர்ட்டில் பா.ம.க. பிரமுகர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் சிம்பு மீது தொடரப்பட்ட வழக்கை வெங்கடேசன் திடீர் என வாபஸ் பெற்றுக் கொண்டார்.
கட்சி தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழக்கை அவர் வாபஸ் பெற்றதாக தெரிகிறது.
Post A Comment: