Propellerads
Navigation

கிசு கிசு பற்றி தெரியாது

என்னைப் பற்றி கிசுகிசுக்கள் வரும்போது மனம் வலிக்கும். அதிலிருந்து விடுபட நினைத்த நான், பத்திரிகைகள் படிப்பதையே நிறுத்தி விட்டேன். இதனால் என்னைப் பற்றி என்ன கிசுகிசு வந்தது என்றே தெரியாது என பொலிவூட் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.

இணையதள சமூக பக்கங்களில் பங்கேற்கவில்லை. இதனால்தான் வெளியுலக வாழ்க்கையைப் பற்றி தெரியாமல் இருக்கிறேன் எனவும் வித்யாபாலன் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் வித்யாபாலன் கூறுகையில், இணையதள பக்கத்தில் தினமும் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. நான் நடித்த திரைப்படம் வெளியாகும்போது, அதன் ப்ரமோஷனுக்காக மட்டுமே பேசுவேன். திருமணம் ஆகிவிட்டதால், நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டதாக நினைக்கிறார்கள்.

ஆனால், நடிப்பில் எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவே அவ்வப்போது புதுதிரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்கிறேன். எனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு சென்றால், மணிக்கணக்கில் அமர்ந்து பிரார்த்தனை செய்கிறேன் என்கிறார் வித்யாபாலன்.

Share
Banner

Post A Comment: