ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’, மேலும், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ‘குற்றம் கடிதல்’ என்ற திரைப்படமும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த இரண்டு படங்களையும் ஒரேநாளில் வெளியிட ஜே.எஸ்.கே.நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகிற ஜுன் 19-ந் தேதி இந்த இரண்டு படங்களையும் வெளியிடவுள்ளனர்.
நான்கு போலீஸ்காரர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க செய்யும் பல தந்திரங்களை நகைச்சுவையாக சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்‘. அதேபோல், ‘குற்றம் கடிதல்’ மக்களிடையே தேசிய விருது படம் என்ற தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுள்ளது.
ஒரேநாளில் இரண்டு படங்களையும் வெளியிடும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமாரின் இந்த முடிவு, இவ்விரண்டு படங்களின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மேலும், நல்ல திரைப்படங்களை வரவேற்று ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இரண்டு நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை ஒரேநாளில் வெளியிட முடிவு செய்துள்ளதாக சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Post A Comment: