விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘புலி’ படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் 1000 பேருடன் சண்டை போடுகிறாராம். இந்த காட்சியை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சண்டைக்காட்சியை ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் சாங் லீன் மிகவும் சிறப்பாக எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் இந்த சண்டைக்காட்சி பெரிய அளவில் பேசப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளை மட்டும் 70 நாட்களுக்கு மேல் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். நான் ஈ சுதீப், ஸ்ரீதேவி கபூர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தை வெளியிட முடிவு செய்து அதற்கான பணிகளில் களமிறங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக விஜய் பிறந்தநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Post A Comment: