Propellerads
Navigation

சன்னி லியோன் படத்துக்கு தணிக்கை குழு தடை

சன்னி லியோன் இந்திப் படங்களில் ஆபாசமாக நடித்து வருகிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அவரது ஆபாச போஸ்டர்கள் கிழித்து சன்னி லியோனை நாடு கடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு உள்ளது. 

சமீபத்தில் சன்னி லியோன் தனது ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் இந்தி கலாச்சாரத்துக்கு கேடு செய்வதாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் சன்னி லியோன் இந்தியில் நடித்த ‘மஸ்தி ஜாதே’ என்ற படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிர்ச்சியானார்கள். சன்னி லியோன் அதிக கவர்ச்சியாக இதில் நடித்து இருந்தார். படத்துக்கு தணிக்கை சான்று தர முடியாது என்று சென்சார் போர்டு மறுத்து விட்டது. 

இதையடுத்து மீண்டும் படத்தை மேல்முறையீட்டுக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் சான்று கிடைக்கவில்லை. படத்தை வெளியிட தணிக்கை குழு தடை விதித்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஆபாச காட்சிகளை வெட்டி விட்டு தணிக்கை சான்று தரும்படி வேண்டியுள்ளனர். ஆனால் முழு படமும் ஆபாசம்தான் என்று தணிக்கை குழுவினர் கூறுகிறார்களாம்.
Share
Banner

Post A Comment: