Propellerads
Navigation

நாங்கள் பின்வாங்கபோவதில்லை: திகா

'மலையக மக்களின் தேவைகளையும் அவர்களின் அபிலாஷைகளையும் அறிந்து செயல்படுவதில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. அடையாளம் இல்லாமல் வாழ்கின்ற மலையக மக்களுக்கு அடையாளத்தை பெற்றுக்கொடுப்பதில் தொழிலாளர் தேசிய சங்கம் முன்னின்று உழைத்துள்ளது' என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

'மலையக மக்களின் குடியிருப்பை உறுதிப்படுத்தி, அம்மக்களுக்கு காணி உறுதிபத்திரம் வழங்கியது பெருமைகுறிய விடயமாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கடந்த காலத்தில் பல அரசாங்கங்கள் இருந்தபோதிலும் மலையக மக்களைபற்றி அக்கறை கொள்ளாதவர்களே ஆட்சியில் இருந்தனர். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இம்மக்களுக்கு தனிவீடு கட்டி அவ்வீடுகளுக்கு உறுதிப்பத்திரமும்; வழங்கியுள்ளனர். இவர்களுக்கு மலையக மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கமே எதிர்காலத்திலும் ஆட்சியமைக்கும். மலையக மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. மலையக மக்களை நாங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்துவோம் என கூறும் அரசியல்வாதிகளுக்கு இது ஒருபாடமாகும்.

இந்திய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி லயன் அறைகளில் வாழும் எல்லா மக்களுக்கும் தனிவீடு அமைத்து, அவர்கள் உறுத்திபத்திரத்துடன் வாழ வழிவகுப்போம்' என மேலும் தெரிவித்தார்.

Share
Banner

Post A Comment: