தமிழ், இந்தி, தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜெனிலியா. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ் முக்குக்கும் 2012–ல் திருமணம் நடந்தது. கடந்த நவம்பர் 25–ந் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நியான் என பெயரிட்டனர்.
குழந்தையை வெளி உலகுக்கு காட்டாமல் வைத்து இருந்தனர். தற்போது முதல் முறையாக ஜெனிலியாவும் ரிதேஷ் தேஷ் முக்கும் குழந்தை படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
என் தந்தையின் 70வது பிறந்த நாள் அன்று ரியான் பிறந்த ஆறு மாதங்கள் நிறைவடைகிறது என்று டுவிட்டரில் ரிதேஷ் தெரிவித்து உள்ளார்.
திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் அவருக்கு நடிப்பு ஆசை வந்துள்ளது. டைரக்டர்களிடம் கதை கேட்க துவங்கியுள்ளார். ரிதேஷ் தேஷ்முக்கும் ஜெனிலியா நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டராம்.
விரைவில் புதுபட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post A Comment: