Propellerads
Navigation

தீபாவளிக்கு வெளிவரும் தல 56

அஜித்தை வைத்து சிறுத்தை சிவா புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாமலேயே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இருப்பினும், ரசிகர்கள் இப்படத்திற்கு ‘தல 56’ என்று தலைப்பிட்டு அழைத்து வருகிறார். 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இதை உறுதி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே, இவருடைய தயாரிப்பில் உருவான ‘ஆரம்பம்’ படம் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்து வெற்றி பெற்றது. அதனாலேயே இந்த படத்தையும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக உருவாகி வரும்  கதையில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்துடன் இவர் இணையும் முதல் படம் என்பதால், இப்படத்திற்காக தனி முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை பதிவு செய்து வருகிறார்.
Share
Banner

Post A Comment: