Propellerads
Navigation

ரயிலில் மோதி ஒருவர் பலி

கொட்டகலை டிரேட்டன் கே.ஓ பிரிவை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலு சந்திரபோஸ் (வயது 40), கொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் வைத்து, ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம், இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று, திம்புள்ளை- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து பதுளையை நோக்கிப் பயணித்த ரயிலிலேயே, அவர் மோதுண்டு பலியாகியுள்ளார்.

மரண விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக, கொட்டகலை வைத்தியசாலைக்கு சடலம், கொண்டு செல்லப்படவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Share
Banner

Post A Comment: