Propellerads
Navigation

'8 தோட்டாக்கள்' ஓப்பனிங் வசூல்




பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்களின் உதவியாளரான ஸ்ரீகணேஷ் என்ற இயக்குனரின் முதல் படமான '8 தோட்டாக்கள்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மணிரத்னம் அவர்களின் 'காற்று வெளியிடை' படத்துடன் வெளியானபோதிலும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படம் சென்னையில் 10 திரையரங்க வளாகங்களில் 37 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,14,840 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்திற்கு கிடைத்த நல்ல அறிகுறி ஆகும்.

மாஸ் நடிகர்கள், பெரிய பட்ஜெட், பிரமாண்ட இயக்குனர், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆகியோர் இல்லாமல் அறிமுக நடிகர்கள், அறிமுக இயக்குனர் ஆகியோர்களின் '8 தோட்டாக்கள்' படம் அதன் திரைக்கதையாலே வெற்றி பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
Share
Banner

Post A Comment: