தனது 14 வயது தங்கையை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட சிறுவனை, பதுளை பதில் நீதவான் ஆனந்த மொரகொட, 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டதுடன் நன்னடத்தை தொடர்பிலான அறிக்கை வரும்வரை, அச்சிறுவனை, அவரது வீட்டில் தங்கவைக்காது, வேறொரு இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பெற்றோருக்கு பணித்துள்ளார்.
பாலியல் காட்சிகளடங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்து பழகி, அதற்கு அடிமையான சிறுவன், அதேபோல செய்து பார்ப்பதற்கு முயன்றுள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை அறிந்துகொண்ட வீட்டிலுள்ள வயோதிபர், சிறுமியை உடனடியாக காப்பாற்றியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் சிறுவனின் தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர், இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சிறுவனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, பதில் நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடக்க இடமளிக்கக் கூடாது என்றும் நீதவான் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் இவ்வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...



Post A Comment: