Propellerads
Navigation

வெள்ளி போன்று மற்றொரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆய்வு மேற் கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் அதி நவீன சக்தி வாய்ந்த டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது.

அந்த டெலஸ்கோப் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்து அதை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது. அது ஏற்கனவே உள்ள வெள்ளி (வீனஸ்) கிரகத்தை போன்றே உள்ளது.

அதன் விட்டம் சூரியனை விட 5-ல் ஒரு மடங்கு உள்ளது. பூமியில் இருந்து 219 வெளிச்ச ஆண்டு தூரத்தில் உள்ளது. மிக குறைந்த தட்பவெப்பம் நிலவுகிறது.இக்கிரகத்தை மிக மங்கலான நட்சத்திரம் சுற்றி வருகிறது. அதற்கு கெப்லர் 1649 என பெயரிட்டுள்ளனர். மேலும் சில சிறிய அளவிலான நட்சத்திரங்களும் இப்புதிய கிரகத்தை சுற்றி உள்ளன. அவை நமது பூமியில் உள்ள நட்சத்திரங்களை போன்றே உள்ளது. அவை சூரியனை விட சிவப்பாகவும் மங்கலாகவும் உள்ளன.
Share
Banner

Post A Comment: